ADDED : ஜன 07, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சர்வதேச சிலம்ப போட்டிகள் இரண்டு நாட்கள் பெங்களூரில் நடந்தது.
இதில் விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி மாணவர்கள் அஜித்குமார், மதன், நட்சத்திர ஆகாஷ் மூவரும் ஒற்றை கம்பம் பிரிவில் தங்க பதக்கமும், காமாட்சி வெள்ளி பதக்கமும், மல்லிகா இரட்டை கம்பம் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றனர். இவர்கள் கல்லுாரி தலைவர் பழனிச்சாமி, உபதலைவர்கள் ரம்யா, ராஜமோகன், செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி உள்ளிட்டோர் பாராட்டினர்.