/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று சாதனை
/
மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று சாதனை
ADDED : ஜூலை 15, 2025 03:17 AM
விருதுநகர்: விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியின் மாணவி து.ரோஷினி நாச்சியார் 2025 மார்ச்சில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 495 பெற்ற நிலையில் மறுகூட்டலில் கூடுதலாக 2 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
கணித பாடத்தில் 100க்கு 98 மதிப்பெண் எடுத்த நிலையில் தான் பெற்ற மதிப்பெண்ணில் திருப்தியடையாத மாணவி ரோஷினி நாச்சியார் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தார். அதன் விளைவாக கணிதத்தில் 2 மதிப்பெண் அதிகமாக பெற்று அப்பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று, தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100, பெற்று மொத்த மதிப்பெண் 500 க்கு 497 பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், விருதுநகர் மாவட்டத்தில் முதலிடமும் பெற்றார்.
மேலும் துர்கா ரிதன்யா - 495, பள்ளியின் இரண்டாமிடமும், சக்தி ஹரிஷ் பாலா - 492 பள்ளியின் மூன்றாமிடமும் பெற்றிருந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் என அனைவரும் பாராட்டினர்.

