/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விரல் ரேகையில் விவேகானந்தர் விருதுநகர் மாணவிகள் சாதனை
/
விரல் ரேகையில் விவேகானந்தர் விருதுநகர் மாணவிகள் சாதனை
விரல் ரேகையில் விவேகானந்தர் விருதுநகர் மாணவிகள் சாதனை
விரல் ரேகையில் விவேகானந்தர் விருதுநகர் மாணவிகள் சாதனை
ADDED : ஜன 13, 2025 04:11 AM

விருதுநகர் : விருதுநகரில் தேசியக்கொடி நிறத்தில் கட்டைவிரல் ரேகை பதிவில் சுவாமி விவேகானந்தர் உருவம் வரைந்து பள்ளி மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் (ஜன.12) தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து விருதுநகர் ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசியக் கொடி நிறத்தில் மாணவிகளின் கட்டைவிரல் ரேகையை பதிவு செய்து சுவாமி விவேகானந்தர் உருவத்தை 625 ச.அடியில் வரைந்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மாணவிகள் 400 பேர் சேர்ந்து, தங்களின் கட்டை விரல் ரேகையில் அக்ரிலிக் நிறங்களால் தேசியக்கொடியின் வண்ணங்களை வெள்ளை நிற பிளக்ஸ்சில் வரைந்தனர். அதன் மையப்பகுதியில் அசோகச் சக்கரம் இருக்கும் இடத்தில் அதே நிறத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவத்தை வரைந்து உலக சாதனையின் அறம் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் தீர்ப்பாளர் சுந்தரமூர்த்தி, உரிமையாளர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்று சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினர்.