/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
107 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
107 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : அக் 03, 2024 04:09 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 கடைகள், நிறுவனங்கள், 43 உணவு நிறுவனங்கள், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 107 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தேசிய விடுமுறை தினத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மூன்று நாட்களுக்குள் விடுமுறை அளிக்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் மூலம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் அனைத்து கிராமசபை கூட்டத்திலும் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர் கண்டறியப்பட்டால் 1098, 155 214 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.