/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதை உரிமம் பெறாமல் விற்றால் நடவடிக்கை
/
விதை உரிமம் பெறாமல் விற்றால் நடவடிக்கை
ADDED : மார் 15, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா செய்திக்குறிப்பு: விவசாயிகள் விதைகளை வாங்கும் போது, பயிர், ரகம், காலாவதி நாள், குவியல் எண், தத்தம் பகுதிக்கு எற்றதா உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.
ஒவ்வொரு அரசு, அரசு சார்பு, தனியார் விதை விற்பனை நிலையங்கள் பழக்கன்றுகள், நர்சரிகள் என அனைத்தும் விதை உரிமம் பெற்று விதைகளை, நாற்றுகளை விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ, கொள்முதல் பட்டியல் மற்றும் விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனைசெய்தாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

