தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் வசதி எதிர்பார்ப்பு

பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் வசதி எதிர்பார்ப்பு

பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் வசதி எதிர்பார்ப்பு


ADDED : அக் 18, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் வசதி வேண்டி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் சார்பில் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விலக்கில் இருந்து சோழபுரம் செல்லும் வழியில் அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான் உள்ளிட்ட கிராமங்களும் அயன் கொல்வங் கொண்டான் பகுதியில் இருந்து நக்கனேரி பிரிவு உள்ளிட்ட பாதைகளில் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.

இப்பகுதியில் உயர்நிலை பள்ளி முடித்து அரசு மேல்நிலை பள்ளிக்கு

பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இங்கிருந்து சொக்கநாதன் புத்தூர், சுந்தரராஜபுரம், ராஜபாளையம் நகர் பகுதி மட்டுமே வாய்ப்பாக உள்ளது.

இதில் ஓரளவு அருகில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதிக்கு சென்று வர முறையான பஸ் வசதி இல்லை. அரசு பள்ளிகளில் கல்வி சலுகைகளும், ராஜபாளையம் நகர் பகுதி அதிக வாய்ப்புகளும், போதிய அளவு புதிய கல்வி சூழல்களும் உள்ளதால் ராஜபாளையத்திற்கு செல்கின்றனர்.

இந்நிலையில் ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் 8:00 மணிக்கு துவங்கி அயன் கொல்லங்கொண்டான் வழியே கூனங்குளம் வரை சென்று 8:45 மணி-க்கு ராஜபாளையம் திரும்புகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் அதிகரித்துள்ள மேல்படிப்புக்காக உள்ள மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் ஒரு சேர இந்த ஒரு பஸ்ஸினை எதிர் நோக்குவதால் கூட்டம் அலைமோதுகிறது.

மாணவர்கள் மக்களின் தேவை கருதி 7:30 மணிக்கு கூடுதல் அரசு பஸ் ஏற்பாடு செய்வதன் மூலம் கிராம பகுதி மாணவர்கள், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என இப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us