தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/லுார்து அன்னை தேர்பவனி

லுார்து அன்னை தேர்பவனி

லுார்து அன்னை தேர்பவனி


UPDATED : அக் 18, 2026 04:29 PM

ADDED : அக் 18, 2026 04:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:29 PM ADDED : அக் 18, 2026 04:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் லுார்து அன்னை கெபி வளாகம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா, தேர்பவனி நடந்தது.

சவேரியார் சர்ச்சில் லுார்து அன்னை கெபி வளாகத்தை அர்ச்சித்து பாதிரியார் லாரன்ஸ் துவக்கி வைத்தார். அதன் பின் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது.

மேலும் லுார்து அன்னை திருஉருவம் மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி சர்ச் வளாகத்தில் நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மன்றாண்டு ஜெபங்களையும், பாடல்களையும் பாடினர்.

இதில் விருதுநகர் டவுன், பாத்திமா நகர், பாண்டியன் நகர், சவேரியார் நகர், வி.வி.ஆர்., நகர், கே.கே.எஸ்.எஸ்.என்., நகர், அதனை சுற்றிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us