/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம் பண்ணையில் இருந்து சாத்துாருக்கு கூடுதல் டவுன் பஸ்
/
ஏழாயிரம் பண்ணையில் இருந்து சாத்துாருக்கு கூடுதல் டவுன் பஸ்
ஏழாயிரம் பண்ணையில் இருந்து சாத்துாருக்கு கூடுதல் டவுன் பஸ்
ஏழாயிரம் பண்ணையில் இருந்து சாத்துாருக்கு கூடுதல் டவுன் பஸ்
ADDED : ஜன 30, 2025 04:55 AM
சாத்துார்: ஏழாயிரம்பண்ணையில் இருந்து சாத்துாருக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழாயிரம் பண்ணையில் இருந்து காலை 8:20 மணிக்கும் அரசு டவுன் பஸ்சும் பின்னர் 8:30 மணிக்கு தனியார் டவுன் பஸ்சும் சாத்துார் வருகின்றன. இரு பஸ்களின் சீட்டுகளும் ஏழாயிரம் பண்ணையிலேயே நிரம்பி விடும் நிலையில் பழைய ஏழாயிரம் பண்ணை, கங்கரக்கோட்டை, மேட்டூர், புதுச்சூரங்குடி, துாங்கா ரெட்டிப் பட்டி, ஒ. மேட்டுப்பட்டி, சத்திரப்பட்டிஆகிய கிராமங்களில் இருந்தும் மக்கள் படியில் தொங்கியபடியும் நின்று கொண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
பள்ளி மாணவர்கள் முதியவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.எ னவே காலை நேரத்தில் 9:00 மணிக்கு கூடுதலான டவுன் பஸ் ஏழாயிரம் பண்ணையில் இருந்து சாத்துாருக்கு இயக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.