/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தங்கம் தென்னரசு சொத்து வழக்கு ஒத்திவைப்பு
/
தங்கம் தென்னரசு சொத்து வழக்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 16, 2024 02:20 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:கடந்த, 2006 - 2011 ஆண்டு தி.மு.க., ஆட்சியில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தற்போதைய தமிழக அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், 2012ல் வழக்குகள் பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் இருந்து, 2022 டிசம்பரில் தங்கம் தென்னரசுவும், 2023 ஜூலையில் சாத்துார் ராமச்சந்திரனும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து,
இவ்வழக்குகளை விசாரித்து அமைச்சர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டது செல்லாது எனவும், மீண்டும் இரு வழக்குகளையும் ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அமைச்சர்கள் இருவர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை இருப்பதால் விசாரணையை, டிச., 13க்கு நீதிபதி பகவதி அம்மாள் ஒத்திவைத்தார்.