ADDED : ஜூலை 09, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:  கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: திருச்சுழி அரசு ஐ.டி.ஐ.,ல் 2025ம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையத்தில் கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், நிலஅளவையர், மின்சார பணியாளர், இயந்திர வேலையாள் ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது.
பயிற்சி முடித்தவுடன் தனியார், அரசு துறைகளில் அப்ரண்டீஸ், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் அசல் சான்றுகளுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, பஸ் பாஸ், இலவச சீருடை வழங்கப்படும்.
விபரங்களுக்கு 70100 40810, 94864 62585, 76038 28709, 95669 29663 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

