ADDED : ஜன 29, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகர், நகர செயலாளர்கள் முருகேசன், பரமசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகுத்தனர்.
தலைமை கழக பேச்சாளர் சற்குணம், கணபதி, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் வனராஜ், பேரூராட்சி செயலாளர்கள் அங்கு துரை பாண்டியன், பொன்ராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கரன்கோயில் ராஜலட்சுமி சிறப்பு பேச்சாளராக பங்கேற்று பேசினார். இதில் வரும் நாடாளுமன்றத் தேர்தல், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களில் ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.