/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்ச்களில் கிறிஸ்து பிறப்பு வழிபாடு; திரளானோர் பங்கேற்பு
/
சர்ச்களில் கிறிஸ்து பிறப்பு வழிபாடு; திரளானோர் பங்கேற்பு
சர்ச்களில் கிறிஸ்து பிறப்பு வழிபாடு; திரளானோர் பங்கேற்பு
சர்ச்களில் கிறிஸ்து பிறப்பு வழிபாடு; திரளானோர் பங்கேற்பு
ADDED : டிச 26, 2024 04:34 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கிறிஸ்தவ  சர்ச்களில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நடந்த வழிபாட்டில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்ச்களில் வண்ண மின்விளக்குகளாலும், ஸ்டார்களாலும் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை சித்தரிக்கும் வகையில்  சர்ச் வளாகங்களில் குடில் அமைக்கப்பட்டன.
விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு விருதுநகர் மறைவட்ட அதிபரும், பாதிரியாருமான அருள்ராயன், உதவி பாதிரியார் தேவராஜ் ஆகியோர் தலைமையிலும், ஆற்றுப்பாலம் அருகில் உள்ள நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிச்சாமி தலைமையிலும், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆரோக்கியம் ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.
ஆர். ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டராய், உதவி பாதிரியார் சாமிநாதன் தலைமையிலும், சாத்தூர் இயேசுவின் திரு இருதய சர்ச்சில் பாதிரியார் காந்தி சவரிமுத்து தலைமையிலும், ஒத்தையால் குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் ஜான் மில்டன், உதவி பாதிரியார் ஆனந்த பிரபு தலைமையிலும்,
அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் அந்தோணி பாக்கியம், தும்மச்சின்னம்பட்டி வியாகுல அன்னை ஆலய கிளை பங்குகளில் பாதிரியார் மரியதுரை, சிவகாசி லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான் மார்ட்டின், காரியாபட்டி அமல அன்னை சர்ச்சில் ஜோசப் அமலன், திருத்தங்கல் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், மீனம்பட்டி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பால்ராஜ், வடபட்டி அருளானந்தர் சர்ச்சில் பாதிரியார் சந்திரநேவிஸ் தலைமையிலும்.
சாட்சியாபுரம் மரியானுஸ் நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் பாதிரியார் அற்புத சாமி ஆகியோரது தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.
திருப்பலியின் இறுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டவர்கள் ஆடிப்பாடி இனிப்புகள் வழங்கி அனைவரையும் மகிழ்வித்தனர். அதன் பின் குழந்தை இயேசுவை அனைவரும் முத்தமிட்டு வணங்கிச் சென்றனர்.
நேற்று காலை முதல் அனைத்து கிறிஸ்தவ சர்ச்களிலும் கிறிஸ்துமஸ் விழா திருப்பலியும் மறையுரையும் நடந்தது. விருதுநகர் மதுரை ரோடு சி.எஸ்.ஐ.,யோவான் சர்ச்சிலும், டி.இ.எல்.சி., சர்ச்சிலும் சிறப்பு ஆராதனை கிறிஸ்து பிறப்பு வழிபாடுகள் நடந்தன.
*அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் கிறிஸ்மஸ் விழா நடந்தது.
கிறிஸ்மஸ் பாடல்கள், ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை சர்ச் நிர்வாகத்தினர் செய்தனர். எல்ஷடாய் ஏ.ஜி., சர்சில் கிறிஸ்மஸ் ஆராதனை நடந்தது.
சபையோர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருச்சுழி ஏ.ஜி., சபையில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு பாடல்கள், ஆராதனை நடந்தது.
பாஸ்டர் ஜீவானந்தம் கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
சபையோர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
* ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.சி.சர்ச்சில் சபைகுரு சந்தனசகாயம் தலைமையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை வரை கிறிஸ்மஸ் பண்டிகை வழிபாடு நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர்,  வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் உள்ள சர்ச்சுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை  நேற்று நடந்தது.

