ADDED : செப் 24, 2026 05:31 PM
விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, செப். முதல் ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள், தங்களது வங்கியை அணுகி ஆதார் இணைக்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அலுவலகம், ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை பயனாளிகள் அணுகலாம், என்றார்.
