ADDED : செப் 24, 2026 05:31 PM
திருச்சுழி, செப். 25 -
திருச்சுழி போலீசார் பூமிநாதர் கோயில் அருகில் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போ அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், திருநெல்வேலி பாப்பாக்குடியை சேர்ந்த உச்சிமாகாளி, 23, தென்காசி மாவட்டம், காசிதர்மத்தைச் சேர்ந்த பரத்குமார், 24, என்பதும், அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதில், பரத்குமார் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுப்பதற்கும், அவருடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விருதுநகர் எஸ்பி,, பரிந்துரை செய்தார். இதனடிப்படையில், விருதுநகர் கலெக்டர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பரத்குமாரை ஜெயிலில் நடக்க உத்தரவிட்டார். போலீசார் பரத்குமாரை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
___
--
