/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கைகள் துணை இயக்குனர் அறிவுரை
/
தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கைகள் துணை இயக்குனர் அறிவுரை
தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கைகள் துணை இயக்குனர் அறிவுரை
தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கைகள் துணை இயக்குனர் அறிவுரை
ADDED : நவ 02, 2024 07:02 AM
விருதுநகர்: மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்ய துவங்கி உள்ளதால் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், வாழை, மா, தக்காளி, கொய்யா பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் எடுக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் துணை இயக்குனர் சுபாவாசுகி செய்திக்குறிப்பு: பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா, எலுமிச்சை மரங்களின் காய்ந்த, பட்டு போன கிளைகளை அகற்ற வேண்டும். எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்து மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.
வருடாந்திர பயிர்களான வாழை மரங்களில் காற்றால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைத்தல் செய்து மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். காற்று வீசும் எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தல் வேண்டும். வாழைத்தார்களை மூடிவைத்தல் வேண்டும்.
தோட்டக்கலை பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வகையில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர் பாசனம், உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதிதயாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.