/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
60 நாட்களை கடந்து மறுகால் பாயும் ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய்

ADDED : ஜன 15, 2024 10:55 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் இதுவரை இல்லாத அளவில் 60 நாட்களுக்கும் மேலாக பெரியகுளம் கண்மாய் மறுகால் விழுந்து தண்ணீர் செல்வது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நவ.10 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால், மம்சாபுரம் கண்மாய்கள் நிரம்பி வழிந்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு அதிகளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டு கண்மாய் நிரம்பி, நவ. 13 முதல் மறுகால் விழுந்து வருகிறது.
ஓரிரு நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், தற்போது வரை பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்து வருகிறது.
இது கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாகும் என முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் ஆண்டாள் கோயில் திரு முக்குளமும் நிரம்பி ததும்பி இருப்பதால், நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் தண்ணீர் ஊற்று பொங்கி வருகிறது. இதனை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
நகரில் குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. இத்தகைய இயற்கை சூழல் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.