sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய அடையாள அட்டை பணிகள் தேக்கம்

/

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய அடையாள அட்டை பணிகள் தேக்கம்

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய அடையாள அட்டை பணிகள் தேக்கம்

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய அடையாள அட்டை பணிகள் தேக்கம்


ADDED : மார் 30, 2025 03:20 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : தேசிய விவசாய அடையாள அட்டை எண் பதிவு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் துறையில் பணிச்சுமை மற்றும் ஆட்கள் பற்றாக்குறை அது 50 சதவீத விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். வருவாய் துறையினரின் ஒருங்கிணைப்பு இன்றி நில உடமை விவரங்கள் பதிவு செய்யும் பணிகள் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் வேளாண் திட்டத்தின் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு (ஒருங்கிணைந்த அடையாள எண்) திட்டம் பிப்.10 முதல் தொடங்கியது.

இதில் மின்னணு முறையில் அனைத்து விவசாயிகளின் தரவுகள் ஆதார் எண் நில விவரம் ஆகியவை சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாளங்களுடன் கூடிய தரவுத்தளம் உருவாக்கப்படுகிறது.

பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி (பி.எம். கிசான் சம்மான் நிதி) பெறுவதற்கு விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக வேளாண்மை தோட்டக்கலை வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் சமுதாய பண்ணை மகளிரை கொண்டு பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது.

இதில் வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, உள்ளிட்ட பிற அரசு துறைகள் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் அனைத்து விவசாயிகளின் விவரங்களையும் பதிவு செய்ய முடியவில்லை. விவசாயிகள் சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட அலைபேசியை கொண்டு வந்து அடையாள எண் பதிவு செய்ய வேண்டும். இதில் அலை பேசிக்கு மூன்று முறை ஓ.டி.பி உள்ளீடு செய்த பின்னரே பதிவு முழுமை அடையும்.

இத்துடன் சர்வர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் ஒரு பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாவதால் நாள் ஒன்றுக்கு 15 விவசாயிகளை கூட பதிவு செய்ய முடிவதில்லை என வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர். நில அடங்கல் உள்ளிட்ட விவசாயிகள் முழுமையான தகவல்கள் வருவாய் துறை உள்ள நிலையில் வருவாய் துறையின் ஒத்துழைப்பு இல்லாததால் கடும் சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில்: வேளாண் துறையில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் இன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

மார்ச் மாதத்திற்கான வருட இறுதி என்பதால் இந்த நிதியாண்டிற்கான திட்டங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டிய நெருக்கடியில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் விவசாய பதிவு எண் திட்டத்தையும் சேர்த்து பார்ப்பதால் ஒரு மாதத்திற்கு வேளாண் துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. மத்திய மாநில அரசுகள் உரிய தீர்வு காண வேண்டும்.






      Dinamalar
      Follow us