/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரம்
/
மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரம்
மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரம்
மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரம்
ADDED : நவ 22, 2024 03:56 AM

மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாத்துார், திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நெல், சோளம், மிளகாய் பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
இப்பயிர்கள் விளைச்சலுக்கு வந்த பிறகு காய வைப்பதற்காகவும், கதிர் அடிப்பதற்காகவும் அனைத்து பகுதிகளிலும்சிமென்ட் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகளில் பெரும்பான்மையானவை சிமென்ட் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
மேலும் களத்திலும்,சுற்றிலும் புதர்கள் அடர்ந்துள்ளது. மேலும் ஒரு சில கிராமங்களில் கதிரடிக்கும் களங்கள் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுகிறது. காலி மதுபாட்டில் உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் பயிர்களை கதிரடிக்கவும், காயவைக்கவும் வழி இன்றி போக்குவரத்து நிறைந்த ரோட்டினை களமாக பயன்படுத்துகின்றனர். இதில் வரும் டூவீலர்கள்விபத்தில் சிக்குகின்றதுரோடு முழுவதையும் மறைத்து பயிர்கள் போடப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களில் இச்செடிகள் சிக்கி பழுதடைகின்றது. இன்னும் சில மாதங்களில் அறுவடை காலம் துவங்கிவிடும்.
எனவே அதற்குள்ளாகவே சேதம் அடைந்துஉள்ள களங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.