ADDED : செப் 02, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அழகாபுரி யில் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சார்பில் திருநர்களுக்காக நடந்து வரும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல், தொழில்நுட்பப் பயிற்சியை கலெக்டர் பார்வை யிட்டார்.
திருநர்களின் திறன்களை மேம்படுத்தி, சுய தொழில் புரிந்து பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும், சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சரவணன், ஆவின் பொது மேலாளர் தேவகி, மாவட்ட சமூக நல அலுவலர் திலகம், அரசு அலுவலர்கள், பயிற்று நர்கள் பங்கேற்றனர்.
