ADDED : செப் 02, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லுார் சந்தையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெயஸ்ரீ. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டில் கற்பூரம் ஏற்றிய போது மின் ஒயரில் தீப்பிடித்தது.
அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டின் அருகே வசித்தவர்கள் வருவதற்குள் தீ பரவியதில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தீயணைப்புத்துறையினர் வந்து நேற்று அதிகாலை 12:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
