ADDED : செப் 20, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:சாத்துார் உப்பத்துாரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாத்துரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஜி சுப்பிரமணியன், ராஜவர்மன் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி வரவேற்றார். பேச்சாளர்கள் இளவரசன், அரங்க சத்யமூர்த்தி பேசினர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாணிக்கம் நன்றி கூறினார்.