/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அண்ணா பல்கலை மாணவி துன்புறுத்தலை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
அண்ணா பல்கலை மாணவி துன்புறுத்தலை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலை மாணவி துன்புறுத்தலை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலை மாணவி துன்புறுத்தலை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2024 04:21 AM

சிவகாசி: அண்ணா பல்கலை மாணவி துன்புறுத்தலை கண்டித்து சிவகாசியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 455 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டப சமையல் கூடத்தில் தங்க வைக்கபட்டதால் கதவை உடைத்து வெளியேறினர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரில் வரும் போதே முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பஸ் ஸ்டாண்டிற்கு 100 மீட்டர் முன்பாகவே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து தடையை மீறி பஸ் ஸ்டாண்டிற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 455 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை தனியார் மண்டப சமையல் கூடத்தில் தங்க வைப்பதற்காக கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் உட்பட கட்சியினர் இங்கே தங்க முடியாது என கூறி மறு பாதையில் மூடிய கேட்டை உடைத்து வெளியேறினர்.
பின்னர் வெளியேறிய கட்சியினர் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர்.
ஒரு சிலர் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மண்டபத்திற்கு அழைத்து வந்து ஹாலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.
*சாத்துார் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பிருந்து கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.சிவசாமி, எஸ்.ஜி. சுப்பிரமணியன், ராஜவர்மன், மணிமேகலை தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக முக்கு ராந்தல் வந்தனர்.
போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்திற்கு 3 பஸ்களில் கொண்டு சென்று அடைத்தனர்.