/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் அல்லல்;' கேள்விக்குறியாகும் விளையாட்டு ஆர்வம்
/
மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் அல்லல்;' கேள்விக்குறியாகும் விளையாட்டு ஆர்வம்
மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் அல்லல்;' கேள்விக்குறியாகும் விளையாட்டு ஆர்வம்
மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் அல்லல்;' கேள்விக்குறியாகும் விளையாட்டு ஆர்வம்
ADDED : பிப் 19, 2024 05:43 AM
நரிக்குடி, : விளையாட்டு மைதானம் இல்லாத அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களின் திறமை பறிபோக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க முடியாமல் போவதுடன், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள், ஊருக்கு நடுவே, முக்கிய ரோட்டோரங்களில், நெருக்கடியான சூழலில் இருக்கின்றன. இப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், போதிய இட வசதியின்றி நெருக்கடியான சூழ்நிலையில் படிக்கின்றனர். மாணவர்கள் அமர்ந்து படிக்கவே இட வசதி இல்லாத போது, விளையாட்டு மைதானம் இருக்க சாத்தியம் இல்லை. மாணவர்களை பொறுத்தவரையில் ஏதாவது ஒரு வகையில் திறமையானவர்களாக இருப்பர்.
சிலர் படிப்பில், சிலர் விளையாட்டில், சிலர் இரண்டிலும் கெட்டிக்காரர்களாக இருப்பர். படிப்பில் மாணவர்கள் ஆர்வத்தை காட்ட விட முடியும். விளையாட்டில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மைதான வசதி கூட, அரசு பள்ளிகளில் கிடையாது. ஊரக பகுதிகளில் காலியிடங்கள் அதிகம் இருந்தாலும், பள்ளியை ஒட்டி சிறிய அளவிலான பகுதியே உள்ளன. மாணவர்களின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கி தருகின்றனர். இடம் இல்லாத சூழ்நிலையால் விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடின்றி வீணாக கிடக்கிறது. பள்ளிதோறும் ஒரு விளையாட்டு மைதானம் ஏற்படுத்துவது கட்டாயமாகிறது.
ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு ஸ்டேடிய வசதி அவசியமாகிறது. தொடர் பயிற்சி மூலமே மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தி, திறமையான வீரரை உருவாக்க முடியும். மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மினி ஸ்டேடியம் செயல்பட்டு வருகிறது. சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், காரியாபட்டி உள்ளிட்ட இடங்களில் மினி ஸ்டேடியம் அமைக்க மாவட்ட விளையாட்டு துறை முயற்ச்சிக்க வேண்டும்.
மாணவர்களின் திறனை கண்டறிந்து விளையாட்டு துறையை மேம்படுத்துவது அவசியம் ஆகிறது. பள்ளி கல்வித்துறையும், விளையாட்டுத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைதானம் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, மைதானம் ஏற்படுத்தி தேவையான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

