/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதிகாலை 4:00 மணிக்கும் கிடைக்கும் மது குடியிருப்பு பகுதிகளை பாராக்கும் அவலம்
/
அதிகாலை 4:00 மணிக்கும் கிடைக்கும் மது குடியிருப்பு பகுதிகளை பாராக்கும் அவலம்
அதிகாலை 4:00 மணிக்கும் கிடைக்கும் மது குடியிருப்பு பகுதிகளை பாராக்கும் அவலம்
அதிகாலை 4:00 மணிக்கும் கிடைக்கும் மது குடியிருப்பு பகுதிகளை பாராக்கும் அவலம்
ADDED : ஆக 20, 2025 06:59 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் குடிக்கு அடிமையானவர்கள் துாங்கி எழுந்ததும், அதிகாலை 4:00 மணிக்கு சென்றாலும், பார்களில் வைத்து மது விற்கின்றனர். அதை வாங்கி விட்டு குடியிருப்பு அருகே குடித்து பார் போல மாற்றுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அரசு டாஸ்மாக் கடை மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும், எப்.எல். 2 எனப்படும் மனமகிழ்மன்றங்கள் காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையும், எப்.எல்.3., எனப்படும் ஓட்டல் பார்கள் காலை 11:00 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரையும் இயங்க வேண்டும். குறிப்பிட்ட இந்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் மது விற்றால் ஆயத்தீர்வை போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்ற நடவடிக்கைகளை தடுப்பர்.
ஆனால் தற்போது மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார் உள்ளட்ட பகுதிகளில் உள்ள சில கடைகளில் இரவு நேரங்களிலும் பார்கள், கடைகள் மறைமுகமாக இயங்குகின்றன. குறிப்பாக பார்கள் 24 மணி நேரமும் மறைமுகமாக மது விற்கின்றனர்.
இந்த 24 மணி நேர மது விற்பனையால் மதுவுக்கு அடிமையானோர் அதிகரித்துள்ளனர். குடும்பங்களில் மதுவால் தகராறு, கொலை நீண்டு கொண்டே போகிறது. இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து உறங்குபவர், அதிகாலை 4:00 மணிக்கு விழிக்கும் போது போதை தேவைப்பட்டு பார் அருகே வந்தாலும் மது கிடைக்கும் அவலம் உள்ளது.
டாஸ்மாக் எனும் அமைப்பு அரசின் லாப மூட்டை சம்பாதிக்கும் ஒன்றாக மாறியதுடன் குடிமகன்களை மேலும் மேலும் அடிமையாக்கி வருகிறது.இதில் ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு தேவையான பணமும் செல்வதால் போலீசாரை அவர்கள் கவனிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலே உள்ளது. மாவட்ட நிர்வாகம் மது விற்பனையில் தொடரும் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் வரும் மாதங்களில் குடிக்கு அடிமையாவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

