ADDED : மார் 17, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடை முறைப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

