ADDED : செப் 19, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், மருத்துவக்கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டு வருதல், நோயாளிகளின் உடன் இருப்பவர்களிடம் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுப்புராஜ், சி.பி.ஐ., மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், வி.சி.க., நகரச் செயலாளர் செல்வம் உள்பட தி.க., தலித் விடுதலை இயக்கம், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

