/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்
/
முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்
ADDED : ஜன 14, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 1995- -2018ம் ஆண்டு வரை படித்த மாணவர்களின் சங்க கூட்டம் நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார்.
முதல்வர் சிவக்குமார், கல்வி ஆலோசகர் செந்தில்குமார் பேசினர். முன்னாள் சங்க மாணவர்களுக்கு கட்டட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சங்கத்தின் தலைவராக கல்லூரி முன்னாள் மாணவியான கணினி துறை பேராசிரியர் பார்வதி தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக வெங்கடசேஷன், செயலாளர்களாக அகமது ஷெரிப், ஹரிஹர பாண்டியன் தேர்வு செய்யப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் .

