ADDED : செப் 29, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் டி.ஏ.கே.எம் ராமம்மாள் துவக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை வகித்தார். 1981--86 வரை படித்த முன்னாள் மாணவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கலந்து கொண்டனர். தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் ராம்ராஜ், ருக்மணி உள்ளிட்ட முன்னாள் ஆசிரியர்களை கவுரவித்தனர்.
மலரும் நினைவுகளாக தங்கள் வகுப்பறைகளில் ஆசிரியரை பாடம் நடத்தக் கூறி நெகழ்ச்சியுற்றனர். நிகழ்ச்சியின் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன், தற்போதைய பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர்.