/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சி இணைப்பு
/
விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சி இணைப்பு
விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சி இணைப்பு
விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சி இணைப்பு
ADDED : அக் 01, 2024 04:36 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியோடு கூரைக்கண்டு ஊராட்சி இணைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக்கும் நோக்கில் ரோசல்பட்டி, கூரைக்குண்டு ஊராட்சிகளிடம் கருத்துரு தயார் செய்ய சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியதாக கூறி மாவட்ட நிர்வாகம் இரு ஊராட்சிகளின் அடிப்படை விவரங்கள் கோரியும், கருத்துரு, தீர்மானம் கோரியும் கடிதம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் இவ்விரு ஊராட்சிகள் இணைக்கப்பட்டால் தேர்வு நிலையில் உள்ள விருதுநகர் நகராட்சி சிறப்பு நிலைக்கு செல்ல வாய்ப்பிருந்தது. கூரைக்குண்டு ஊராட்சியில் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக. 15 கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ரோசல்பட்டியை மட்டும் விட்டு விட்டு கூரைக்குண்டு ஊராட்சியை இணைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் 72 ஆயிரத்து 144 மக்கள் தொகை கொண்ட விருதுநகர் நகராட்சியின் மக்கள் தொகை எண்ணிக்கை 94 ஆயிரத்து 505 ஆக உயர்கிறது. பரப்பளவும் 6.35 ச.கி.மீ.,ல் இருந்து 11.43 ச.கி.மீ., ஆக அதிகரிக்கிறது. ஆனால் அறிவிக்கப்பட்ட ரோசல்பட்டி ஊராட்சி இணைக்கப்படாததால் பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.