ADDED : பிப் 02, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு தாலுகா எஸ். அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சுரேகா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியை பாக்கியலட்சுமி வரவேற்றார். தமிழக காவல்துறை முன்னாள் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், மாணவர்களுக்கு உயர்ந்த இலக்கினை நிர்ணயித்து, அதனை அவர்கள் அடையச் செய்ய ஆசிரியர்கள் வழி காட்ட வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது இன்று ஆண், பெண் இருபாலரும் 78% கல்வி பெற்றுள்ளனர். இதனை நூறு சதவீதமாக்க வேண்டும் என்றார். விழாவில் சாதனை மாணவர்களுக்கு ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.
பென்னிங் டன் கமிட்டி துணைத் தலைவர் முத்து பட்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.
