/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அம்ரித் பாரத் ரயில்வே திட்டப் பணிகள் மந்தம்: ராஜபாளையத்தில் பயணிகள் தவிப்பு
/
அம்ரித் பாரத் ரயில்வே திட்டப் பணிகள் மந்தம்: ராஜபாளையத்தில் பயணிகள் தவிப்பு
அம்ரித் பாரத் ரயில்வே திட்டப் பணிகள் மந்தம்: ராஜபாளையத்தில் பயணிகள் தவிப்பு
அம்ரித் பாரத் ரயில்வே திட்டப் பணிகள் மந்தம்: ராஜபாளையத்தில் பயணிகள் தவிப்பு
ADDED : டிச 10, 2024 04:48 AM

மதுரை மண்டலத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன.
இதன்படி ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக இரண்டாவது நுழைவு பாதை, ஏற்கனவே உள்ள பாதையை விரிவுபடுத்துதல், மாற்று திறனாளிகளுக்கான சுகாதார வளாகம், முதல் வகுப்பு காத்திருப்பு அறை, கூடுதல் கட்டடம், கண்காணிப்பு கேமரா, வாகன காப்பகம், லிப்ட், இரண்டாவது நடை மேம்பாலம், பயணிகள் உள் நுழைந்து வெளியே செல்வதற்கான தனி தனி வசதி என ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருவதுடன் பாதுகாப்பு கருதி ஏற்கனவே இருந்த பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
வாகன நிறுத்துமிடம், லிப்ட், நடை மேடையில் எல்.இ.டி அறிவிப்பு திரை, கண்காணிப்பு கேமரா ஆகிய பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது. இதில் வாகன காப்பகம் தற்போது வரை பயணிகளின் பயன்பாட்டிற்கு வரவில்லை. புதிய கட்டடம், இரண்டாவது நுழைவு வாயில், காத்திருப்பு அறை, நடைமேடை மேற்கூரை பணிகள் மந்தமாக நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வருவாய் அடிப்படையில் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் என்.எஸ்.ஜி -5 தரவரிசையில் இருந்து என்.எஸ்.ஜி- 4 என்ற தரவரிசைக்கு முன்னேறி உள்ளது. ஓராண்டுக்கு மேல் நடக்கும் கட்டுமான பணி காரணமாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

