/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடைகல் இயந்திரம் பயற்சி பெற அழைப்பு
/
கடைகல் இயந்திரம் பயற்சி பெற அழைப்பு
ADDED : பிப் 04, 2024 11:59 PM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தாட்கோ நிறுவனம் மூலம் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி என்.டி.டி.எப்., நிறுவனத்தின் மூலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழி வகை செய்யப்படவுள்ளது.
18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள். தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்று வழங்கப்படும்.
ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். புகழ் பெற்ற தனியார் ஆலைகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இப்பயிற்சி பெற www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கலாம், என்றார்.

