/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது அவதியில் அன்பு நகர் மக்கள்
/
குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது அவதியில் அன்பு நகர் மக்கள்
குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது அவதியில் அன்பு நகர் மக்கள்
குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது அவதியில் அன்பு நகர் மக்கள்
ADDED : அக் 16, 2025 11:51 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அன்பு நகரில் குறைந்த மின் அழுத்தம் வருவதால் மின்சாதனங்கள் பழுதாகி மக்கள் அவதிப் படுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 3 வது வார்டை சேர்ந்தது அன்பு நகர். இங்கு 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது. இங்கு வீட்டுக்கு வீடு விசைத்தறி அமைத்து நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் குறைவான மின் அழுத்தம் வந்ததால் மின் சாதன பொருட்கள் இயங்காமலும் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு என மின்வாரியம் டிரான்ஸ்பார்மர் அமைத்தது.
இருந்தபோதிலும் முழுமையான மின்சாரம் இந்த பகுதிக்கு வருவது இல்லை. நாளுக்கு நாள் விசைத்தறி வீடுகளில் புதியதாக அமைப்பதால் மின்சாரம் தேவை அதிகமாக உள்ளது. 10 நாட்களாக வீடுகளில் குறைவான மின் அழுத்தம் வருவதால் மாலை நேரங்களில் விளக்குகள் எரியாமலும் டிவி, பிரிட்ஜ், மிக்சி இயங்காமலும் உள்ளது. இதனால் மின் சாதனங்கள் பழுதாகி விடுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்கள் உள்ள நிலையில் குறைந்த மின் அழுத்தத்தில் வரும் மின்சாரத்தை வைத்து வீட்டு பணிகள் ஒன்றும் செய்ய இயலவில்லை என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மின்வாரியம் பராமரிப்பு என்ற பெயரில் வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, பகுதி நேர மின்தடை, சிறப்பு மின் தடை என அடிக்கடி மின்தடை செய்கிறது. ஆனால் சீராக மின்வினியோகம்கொடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
நெசவாளர் காலனிக்கு அந்தப் பகுதிக்கு ஏற்ற வகையில் அதிக அழுத்தம் உள்ள டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.