ADDED : ஜன 14, 2025 10:43 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் 8ம் திருநாளான நேற்று மணவாள மாமுனிகள் சன்னதியில் மங்களாசாசனம் நடந்தது.
ஜனவரி 7-ல் துவங்கிய விழா கடந்த 8 நாட்களாக காலையில் ஆண்டாள், கோயிலில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி வந்து எண்ணெய் காப்பு மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு எண்ணெய் காப்பு சேவைகள் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
8ம் நாளான நேற்று ஆண்டாள் வழக்கம் போல் மாட வீதிகள் சுற்றி எண்ணெய் காப்பு மண்டபம் வந்தடைந்தார். அங்கு எண்ணெய் காப்பு உற்ஸவம் நடந்தது பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ரத வீதிகள் வழியாக மணவாள மாமுனி சன்னதி வாசலில் ஆண்டாள் எழுந்தருள, மங்களாசாசனம் நடந்தது. இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.