/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயில் கட்டுரை /பழைய படத்தை வைத்துக் கொள்ளவும்
/
ஆண்டாள் கோயில் கட்டுரை /பழைய படத்தை வைத்துக் கொள்ளவும்
ஆண்டாள் கோயில் கட்டுரை /பழைய படத்தை வைத்துக் கொள்ளவும்
ஆண்டாள் கோயில் கட்டுரை /பழைய படத்தை வைத்துக் கொள்ளவும்
ADDED : ஜூலை 28, 2025 03:41 AM
108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவ திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஆண்டாள் கோயிலின் சிறப்பு.
ஆண்டாளின் திருப்பாவை இல்லாமல் எந்த ஒரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது. எல்லாவற்றிற்கும் ஆண்டாள் முதன்மை பெற்று பெருமாளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருப்பதும், தேரோட்டத்தில் ரெங்கமன்னாருடன் பவனி வந்து அருள் பாலிப்பதும் உலகெங்கும் காண முடியாத ஒரு வைபவம்.
தமிழ்நாடு அரசு ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தை இலச்சினையாக கொண்டிருப்பதும்,  பெரிய பெரு-மாள் எனும் வட பத்ரசயனர் பெருமாளாக எழுந்தருள்வதும், ஆழ்வார் பெருமக்களில் நாராயணனுக்கு பல்-லாண்டு பாசுரம் பாடிய பெரியாழ்வார் என்று போற்றப்படும் விஷ்ணு சித்தர் திருவாய்மொழி
இயற்றியதும்,  பெரியகுளம் என்று அழைக்கப்படும் திருமுக்குளம் அமைக்கப்பட்டு இருப்பதும்  இத்திருத்தலத்-தின் தனி சிறப்புகள்.
2000ல் நடந்த கோயில் மகா கும்பாபிஷேகத்தை அதன் கமிட்டி தலைவராக இருந்த எனது தந்தை ராமசுப்பி-ரமணிராஜா  நடத்தி முடித்தார். 2015ல் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம், மேலும்  நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலமாக பக்தர்களின் நன்கொடையால் தங்க விமானம் செய்து அதை 2016ல்  கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறச் செய்தார்.
--பி.ஆர். வெங்கட்ராம ராஜா
அறங்காவலர் குழு தலைவர் நாச்சியார் ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்
சேர்மன், ராம்கோ குரூப் தொழில் நிறுவனங்கள், ராஜபாளையம்.
தலைவர், நாச்சியார் சாரிட்டி  டிரஸ்ட்,  ஸ்ரீவில்லிபுத்துார்.

