/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் தேரோட்ட முகூர்த்த கால் நடும் விழா
/
ஆண்டாள் தேரோட்ட முகூர்த்த கால் நடும் விழா
ADDED : ஜூன் 07, 2025 01:00 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், ரெங்க மன்னார் திரு ஆடிப்பூரத் திருவிழா பணிகள் துவக்கத்திற்கான முகூர்த்த கால் நடும் விழா நேற்று நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 28ல் தேரோட்டம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
கீழ ரத வீதியில் தேரின் முன்பு நடந்தது.
தேவராஜ் பட்டர் தலைமையில் கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேரின் மேல் அலங்காரம் செய்வதற்கான மரத்தூண்கள் நடப்பட்டது.
. இதனையடுத்து தேரினை சீரமைக்கும் பணிகள் துவங்கியது.
நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.