/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம்
/
ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம்
ADDED : டிச 29, 2025 06:28 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் 7ம் ஆண்டு திருப்பாவை முற்றோதல் ஊர்வலம், ஆண்டாள் சீர்வரிசை திருவிழா நடந்தது.
மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர் தலைமை வகித்து மங்கள சாசனம் செய்தார். டிரஸ்ட் நிர்வாகிகள் சரவண கார்த்திக், சரவணதுரை, வேதபிரான் சுதர்சன், தென்காசி பா.ஜ. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலை வகித்தனர். புலவர் அனிதா வரவேற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி லக்ஷ்மண சந்திரா விக்டோரியா கவுரி, ஒரே நாடு ஆசிரியர் நம்பி நாராயணன், தொலைக்காட்சி நெறியாளர் ரங்கராஜ் பாண்டே வாழ்த்தினர். முன்னாள் எம்.எல்.ஏ. சந்திர பிரபா திருப்பாவை ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பாவை பாடல்கள் பாடி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து சன்னதியில் சீர்வரிசை பொருட்களை சமர்ப்பித்து ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். பத்ரி நாராயணன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தொண்டர் குழாம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

