/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோப்பூர் - சத்திரம் புளியங்குளம் ரோட்டில் சீமை கருவேல மரங்களால் விபத்து அச்சம்

ADDED : டிச 29, 2025 06:28 AM

காரியாபட்டி: தோப்பூர் - சத்திரம் புளியங்குளம் ரோட்டில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
காரியாபட்டி தோப்பூர் - சத்திரம் புளியங்குளம் ரோடு 2 கி. மீ., தூரம் உள்ளது. இந்த வழியாக நரிக்குடிக்கும், திருச்சுழிக்கும் எளிதில் சென்று வர முடியும். ரோடு படுமோசமாக இருந்தது. இதனால் பல கி.மீ., தூரம் சென்று செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.
தற்போது ரோடு புதுப்பிக்கப்பட்டு, பெரும்பாலான வாகன ஓட்டிகள் அந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோட்டோரத்தில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. வளைவான இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. இரவு நேரங்களில் ரோடு இருக்கும் இடம் தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். இதனால் ரோட்டோரமுள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.