/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்
/
திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்
திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்
திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்
ADDED : மார் 05, 2024 06:04 AM

திருச்சுழி : திருச்சுழி பகுதிகளில் ஆந்திரா சம்பா மிளகாய் அறுவடை செய்து வெயிலில் காய வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.
திருச்சுழி, தம்பநாயக்கன்பட்டி,மீனாட்சிபுரம், வேப்பனசேரி, ஆலடிப்பட்டி உட்பட பகுதிகளில் மிளகாய் விவசாயத்திற்கு பெயர் போனது. இந்தப் பகுதியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஆந்திரா சம்பா மிளகாய் பயிரிடுகின்றனர். 500 ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிரிடப்படுகிறது.
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சூரங்குடி உட்பட, பல ஊர்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக இங்கு வந்து மிளகாய் கொள்முதல் செய்வர். நல்ல காரமும், சிவப்பு நிறத்தில் இருப்பதால் இந்த பகுதி களில் விளையும் மிளகாய்க்கு கடும் கிராக்கி உள்ளது.
இது குறித்து இந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைவு. சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மிளகாய் பயிர்கள் சேதம் அடைந்து விட்டன.
மீதமுள்ள மிளகாய் பயிர்களை காப்பாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். 100 கிலோவிற்கு 18 முதல் 19 ஆயிரம் வரை விலை போகிறது. நீர்நிலைகளை பராமரித்தால் விளைச்சல் இன்னும் நன்றாக இருக்கும். என்றனர்.

