/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மகப்பேறு மருத்துவமனையில் செயல்படாத அங்கன்வாடி மையம்
/
அரசு மகப்பேறு மருத்துவமனையில் செயல்படாத அங்கன்வாடி மையம்
அரசு மகப்பேறு மருத்துவமனையில் செயல்படாத அங்கன்வாடி மையம்
அரசு மகப்பேறு மருத்துவமனையில் செயல்படாத அங்கன்வாடி மையம்
ADDED : ஜூன் 08, 2025 11:19 PM

ராஜபாளையம்:ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை நுழைவு பகுதியில் பயன்பாடு இன்றி உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை காத்திருப்போர் அறையாக மாற்ற முன் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நகர் நடுவே அரசு மகப்பேறு குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. அவசர சிகிச்சை பிரிவு பச்சிளம் குழந்தைகள், தொற்று நோய் சிகிச்சை தனிப்பிரிவு, பிரசவத்திற்கு பின் தனி கவனிப்பு என நோயாளிகள் அதிகம் வந்து செல்லும் இங்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 300க்கும் அதிகமான பிரசவங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் செலவில் கட்டப்பட்டு குறைந்த காலம் மட்டும் செயல்பட்டது. இதனால் பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பு உள் நோயாளிகள் பிரிவாக மருத்துவமனை சார்பில் மாற்றிக் கொண்டனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் கட்டடத்தின் படியில் தங்கி சென்று வருகின்றனர்.
தற்போது மருத்துவமனை வளாக பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் கைவிடப்பட்டு 6 மாதங்களாக செயல்பாடின்றி உள்ளது. பயன்பாடு இன்றி உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் காத்திருப்பு அறையாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.