/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடகை கட்டடத்தில் அவதிப்படும் அங்கன்வாடி குழந்தைகள்
/
வாடகை கட்டடத்தில் அவதிப்படும் அங்கன்வாடி குழந்தைகள்
வாடகை கட்டடத்தில் அவதிப்படும் அங்கன்வாடி குழந்தைகள்
வாடகை கட்டடத்தில் அவதிப்படும் அங்கன்வாடி குழந்தைகள்
ADDED : ஜூலை 13, 2025 12:12 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அங்கன்வாடி சேதமடைந்து இருப்பதால் வாடகை வீட்டில் போதுமான வசதிகளின்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது குல்லூர்சந்தை ஊராட்சி . இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் சேதம் அடைந்து போனதால் அருகில் ஒரு வாடகை வீட்டில் வைத்து பணியாளர்கள் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மின்வாரியத்தினர் மீட்டர் ரீடிங் எடுக்க வந்த போது, வீட்டில் குழந்தைகள் இருப்பதை பார்த்து, வீட்டுக்காரர்களிடம் வணிக பயன்பாட்டிற்கு உரிய மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறிவிட்டனர். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் குழந்தைகளை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல அங்கன்வாடி பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சேதம் அடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடிக்க ஊராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்காததால் பணி நடக்காமல் உள்ளது.
குழந்தைகளின் நலன் கருதி, உடனடியாக அவர்களை பராமரிக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வேறொரு கட்டடத்தை ஒதுக்க வேண்டும் என்றும், உடனடியாக புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.