/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்ஸவம் துவக்கம்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்ஸவம் துவக்கம்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்ஸவம் துவக்கம்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்ஸவம் துவக்கம்
ADDED : ஜூன் 27, 2025 03:03 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு கோயில் யானை முன் செல்ல கொடிபட்டம் மாட வீதிகள் சுற்றி வந்து வடபத்ர சயனர் சன்னதியில் உள்ள பெரியாழ்வார் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து வெங்கடாசல பட்டர் கொடி ஏற்றினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
ஜூலை 6 வரை 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், மாலை 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. ஜூன் 4 அன்று காலை 7:05 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது.