/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை கிடங்காக மாறிய கிணறு அண்ணா நகர் குடியிருப்புவாசிகள் அவதி
/
குப்பை கிடங்காக மாறிய கிணறு அண்ணா நகர் குடியிருப்புவாசிகள் அவதி
குப்பை கிடங்காக மாறிய கிணறு அண்ணா நகர் குடியிருப்புவாசிகள் அவதி
குப்பை கிடங்காக மாறிய கிணறு அண்ணா நகர் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : ஜூலை 24, 2025 11:30 PM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 25 வது வார்டு அண்ணா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த நிலையில் உள்ள கிணற்றினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அண்ணா நகர் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிணறு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிணறு இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில் குப்பை கிடங்காக மாறிவிட்டது.
இப்பகுதியின் கழிவுநீரும் கிணற்றில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள் தெரியாமல் விளையாடும் போது கிணற்றில் விழ வாய்ப்பு உள்ளது. தவிர இதனை பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்களின் இருப்பிடமாக கொண்டுள்ளது. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றினை உடனடியாக மூட வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.