/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய பூப்பந்தாட்ட போட்டி அன்னப்பராஜா பள்ளி சாதனை
/
தேசிய பூப்பந்தாட்ட போட்டி அன்னப்பராஜா பள்ளி சாதனை
ADDED : அக் 13, 2024 04:20 AM

ராஜபாளையம்: தேசிய அளவு பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா முதலிடம் பிடித்தார்.
தமிழக பூப்பந்தாட்ட கழகம் சார்பில் 15 வயதிற்குட்பட்ட சப்- ஜூனியர் பிரிவில் தமிழக அளவில் 10 மாணவியர் அடங்கிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவெற்றியூரில் ஏழு நாள் சிறப்பு பயிற்சிக்குப் பின் தேசிய அளவில் அரியானா மாநிலத்தில் நடந்த போட்டிகளில் பங்கேற்று இந்த அணி முதலிடம் பிடித்தது.
தமிழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமை தேடித்தந்த மாணவியை பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார். ஒத்துழைப்பு தந்த தலைமை ஆசிரியர் ரமேஷ், உடற்கல்வி இயக்குனர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.