/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் ஆண்டு விழா
/
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : மார் 30, 2025 03:51 AM

சிவகாசி : சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் 25 வது ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் நவநீத் பேசியதாவது, சமூகம் பல நெருக்கடிகளுக்கு இடையே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய நெருக்கடியை சமாளிக்க கூடிய உத்திகளை மாணவர்கள் கண்டறிய வேண்டும். போதை மது போன்ற தீய பழக்க வழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சாதனை புரிந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. நுால்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. பண்பாட்டு மையம் சார்பில் மாணவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. கணிதவியல் துறை தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.