/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேட்டை தடுப்பு காவலர் கரடி கடித்து படுகாயம்
/
வேட்டை தடுப்பு காவலர் கரடி கடித்து படுகாயம்
ADDED : அக் 12, 2025 11:05 PM
ராஜபாளையம்; விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வனப்பகுதியில் ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலரை கரடி தாக்கியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் அடுத்த சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த அழகு மகன் முத்து 45, வேட்டை தடுப்பு காவலர். நேற்று காலை சுந்தர்ராஜபுரம் மேற்கே நிலா பாறை பகுதியில் ரோந்து பணியில் வேட்டை தடுப்பு காவலர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் பதுங்கி இருந்த கரடி இவரை தாக்கி காலில் கடித்தது. உடன் சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் இவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர், சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.