/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூழ்ச்சியால் வெற்றி வாய்ப்பு போச்சு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ADDED : அக் 13, 2025 05:38 AM
ராஜபாளையம் : கடந்த தேர்தலில் சிலரின் சூழ்ச்சியால் ராஜபாளையத்தில் வெற்றி வாய்ப்பு இழந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது, கடந்த முறை ராஜபாளையத்தில் கவனக் குறைவு, ஒரு சிலரின் சூழ்ச்சியால் மிகச்சிறிய வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு போனது. இந்த பூத் கமிட்டி என்பது ஒரு விதை. இதை விருட்சமாக வளர்ப்பதன் மூலம் வெற்றியை நிர்ணயிக்கும் களமாக இது அமையும்.
தி.மு.க., பொய்யான வதந்திகள், செய்திகளை சமூக வலை தளங்களில் பரப்புகின்றனர். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும் தினசரி பிறர் மீது குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே உள்ள ஆட்சியாக தான் தி.மு.க., உள்ளது. பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். இதன் மூலம் ராஜபாளையம் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியும், என்றார்.
வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன் தலைமை வகித்தார். ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.