/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்நடை ஆம்புலன்ஸ்களுக்கு கூடுதல் மருந்துகள் வழங்க எதிர்பார்ப்பு
/
கால்நடை ஆம்புலன்ஸ்களுக்கு கூடுதல் மருந்துகள் வழங்க எதிர்பார்ப்பு
கால்நடை ஆம்புலன்ஸ்களுக்கு கூடுதல் மருந்துகள் வழங்க எதிர்பார்ப்பு
கால்நடை ஆம்புலன்ஸ்களுக்கு கூடுதல் மருந்துகள் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 08, 2024 04:16 AM
விருதுநகர் : தமிழகத்தில் நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்களுக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் மருந்துகள் வழங்க வேண்டுமென கால்நடை மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாக நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் ஒரு ஒன்றியத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் 250 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவம், தடுப்பூசி, செயற்கை கருவூட்டல் செய்யப்படுகிறது. கிராமங்களில் ஊரகப்பகுதிகளில் மருத்துவமனைக்கு கொண்டு வர முடியாத கால்நடைகளுக்கு டாக்டர்கள் நேரில் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்காக ஒப்பந்த அடிப்படையில் டாக்டர், உதவியாளர், டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் திங்கள் முதல் சனி வரை ஒரு நாளைக்கு தங்கள் ஒன்றியத்தில் உள்ள இரண்டு பகுதிகளுக்குசென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால் கிராமப்புறங்களில் அதிகளவில் ஆடுகள், மாடுகள் வளர்க்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப மருந்துகள் ஆம்புலன்ஸ்களில் இருப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் பல கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் இக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தவிர்க்க நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்களுக்கு தேவைக்கு ஏற்ப கூடுதலாக மருந்துகள் வழங்கினால் கிராமங்களில் தடையின்றி சிகிச்சை அளிக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.