/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
/
விதை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 17, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா செய்திக்குறிப்பு: புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும்.
பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பகுதிக்கும், பருவத்திற்கும் உகந்த விதைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.
புதிய விதை உரிமம் பெறுவதற்கும், உரிமம் புதுப்பித்தலுக்கும் தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அனுகி seed certification. tn.gov.in என்ற இணையதளத்தில் முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெறலாம், என்றார்.

