/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக்கல்லுாரிக்கு முதல்வர் நியமனம்
/
அரசு மருத்துவக்கல்லுாரிக்கு முதல்வர் நியமனம்
ADDED : பிப் 17, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு முதல்வராக இருந்த டாக்டர் சங்குமணி, தமிழக மருத்துவக்கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இதனால் கடந்த மூன்று மாதங்களாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய டீன் நிரப்பப்படாததால் மருத்துவபணிகள் பாதிக்கப்படுகிறது.
எனவே புதிய டீன் உடனடியாக நிரப்பப்படவேண்டும் என்று தினமலர் நாளிதழில் பிப். 13 ல் வெளியானது. இதன் எதிரொலியாக சென்னை மருத்துவக்கல்லுாரியின் மகப்பேறு, மகளிர் மருத்துவத்துறை பிரிவு தலைவர், டாக்டர். சீதாலட்சுமி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.